டாஸ்மாக் சங்கங்களுடன் அமைச்சர் இன்றும் பேச்சுவார்த்தை
18 Feb 2026, 3:04 pm
<p><strong>டாஸ்மாக் சங்கங்களுடன் அமைச்சர் இன்றும் பேச்சுவார்த்தை</strong></p>
<p>சென்னை, பிப். 18 - டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களோடு பிப்.19 அன்றும் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேச்சு வார்த்தை நடத்துகிறார். டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்த வேண்டும். இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும். காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன தொழிற் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிப்.18 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடை பெறும் என்று அறி விக்கப்பட்டது. இதனை யடுத்து மேலான் இயக்குநர் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்ட தையடுத்து கடையடைப்பை கைவிட்டு தொழிற்சங்கங் கள் சார்பில் டாஸ்மாக் தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் கே.திருச்செல்வன் (சிஐ டியு), நா.பெரியசாமி (ஏஐ டியுசி), இரணியப்பன் (ஏஐசிசிடியு), பேரரறி வாளன் (எல்எல்எப்), பாரதி (விற்பனையாளர் சங்கம்) உள்ளிட்டு 15க்கும் மேற்பட்ட சங்கத் தலைவர்களோடு அமைச்சர் எஸ்.முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து பிப்.19 அன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.</p>
