கனிம வளம் - மணல் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி
24 Jul 2026, 9:59 pm
<p><strong>கனிம வளம் - மணல் குவாரி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி</strong></p><p>சிவகங்கை,ஜூலை 24- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: முதலமைச்சரின் அறி வுறுத்தலின்படி, கனிம வளத்துறை தொடர்பான அனைத்து புகார்களும் ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கனிம வளம் மற்றும் மணல் குவாரிகள் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் நடந்திருந்தால், அதுகுறித்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மணல் குவாரி களில் முறைகேடுகளைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குவாரி செயல்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் முறையாக கண்காணிப்பு மேற்கொள் ளப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு இடங்களில் மணல் குவாரிக ளால் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகளை அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற் றத்திற்காக அனைத்து தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்க ளும் ஒருங்கிணைந்து பணியாற்றி வரு கின்றனர். தனிப்பட்ட திட்டங்கள் மட்டு மின்றி, பொதுவான மாவட்ட மேம்பாட்டுப் பணிகளிலும் அரசு சிறப்புக் கவனத்துடன் செயல்படுகிறது. குப்பைகளை கொட்டுவதற்கு இடப் பற்றாக்குறை இருப்பது அரசின் கவ னத்திற்கு வந்துள்ளது. குப்பை மேலாண்மை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து ஆய்வு செய் யப்பட்டு வருகிறது. மக்களின் புகார்களுக்கு உடனடித் தீர்வு காண்பதும், கனிம வளத்துறையில் வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வதும் அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.</p>
