காரியாபட்டி ஒன்றியத்தில் வாக்குச் சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
11 Apr 2026, 5:30 am

காரியாபட்டி ஒன்றியத்தில் வாக்குச் சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

காரியாபட்டி, ஏப்.10- காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயக்கூர், அ.தொட்டியங்குளம், டி.வேப்பங்குளம், எம்.இலுப்பைகுளம், என்.நெடுங்குளம், ஸ்ரீராம்பூர், விட்டியானேந்தல், ராவதிவேந்தல், சத்திரம் புளியங்குளம், வெற்றிலைமுரு கன்பட்டி, வல்லப்பன்பட்டி, டி.செட்டிக்குளம், மேலக்காட்டுச்சங்கமம், இராமலிங்கபுரம், கீழக்காட்டுச்சங்கமம், காரைக்குளம் மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சிக்கான அடித்தளத்தைத் திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்துள்ளோம். இந்த வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடரவும், வரும் ஒவ்வொரு ஆண்டும் பொற்காலமாக அமையவும் 'உதயசூரியன்' சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக பள்ளிவாசலுக்கு சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜமாத் நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.