தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் அகழாய்வு பொருட்கள் கண்காட்சி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்

23 Jan 2026, 5:49 pm
மதுரையில் அகழாய்வு பொருட்கள் கண்காட்சி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
<p><strong>மதுரையில் அகழாய்வு பொருட்கள் கண்காட்சி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்</strong></p> <p>மதுரை, ஜன.23- தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள் என்ற தலைப்பில் மூன்று நாள் பன்னா ட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 22 முதல் 24 வரை மதுரையில் நடைபெறுகிறது. மது ரை அழகர் கோவில் சாலையில் உள்ள ஹோட்டல் கோர்ட்யார்டு மேரியாட்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழனன்று தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப் பட்ட தமிழ்நாடு அகழாய்வு பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து, தொல்லியல் துறையின் ஆய்வுத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் மாநகராட்சி மேயர் (பொ) தி.நாகராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் கா.ராஜன், தொல்லியல் துறை இணை இயக்குநர் இரா.சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென் னரசு பேசுகையில், தொல்லியல் என்பது வெறும் அகழ்வாராய்ச்சி அல்ல; அது மக்களின் வாழ்வியல், தொழில்நுட்பம், வணிகம் மற்றும் இடப்பெயர்வுகளை புரிந்து கொள்ளும் அறிவியல் பயணம். சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அறி வியல் காலக்கணிப்பு ஆய்வுகள், அங்கி ருந்து கண்டறியப்பட்ட இரும்பு கி.மு. 3,345 காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை யில் நெல் மற்றும் தினை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதன் மூலம், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே ஈர மற்றும் உலர் சாகுபடி நடை பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் அறிவியல் காலக்கணிப்பு முடிவுகள், தென் னிந்திய இரும்புக் காலம் சிந்து சமவெளி நாகரிகத்துடன் சமகாலத்தில் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட குறியீடுகளில் சுமார் 90 விழுக்காடு சிந்து சமவெளி குறியீடுகளு டன் ஒத்துப்போகின்றன என்றார். மேலும் அவர் கூறுகையில், மதுரை &nbsp;காமராஜர் பல்கலைக்கழகம், டெக்கான் கல்லூரி, ஜார்ஜியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மரபணு ஆய்வு, ஐசோடோப் பகுப்பாய்வு, ஒளிவீச்சு காலக்கணிப்பு, தாவரவியல், உலோக வியல் உள்ளிட்ட நவீன அறிவியல் ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் கூறினார். கீழடி மற்றும் பொருநையில் அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், அழகன்குளம், தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.