உயர்கல்வித்துறை அமைச்சருடன் ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை
14 Jun 2026, 1:57 am
<p><strong>உயர்கல்வித்துறை அமைச்சருடன் ஆசிரியர் சங்கங்கள் ஆலோசனை</strong></p><p>சென்னை, ஜூன் 13- கல்லூரி பேராசிரியர்களுக் கான பணி மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதனுடன் ஏயுடி மற்றும் மூட்டா சங்கப் பொறுப்பாளர்கள் நடத்திய ஆலோ சனைக் கூட்டத்தில், இப்பிரச் சனைக்கு விரைந்து தீர்வு காண அதி காரிகளுக்கு அமைச்சர் உத்தர விட்டுள்ளார். புதனன்று (ஜூன் 10) ஏயுடி மற் றும் மூட்டா சங்கங்களின் நிர்வாகி கள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதனை நேரில் சந் தித்து, பணி மேம்பாட்டுத் திட் டத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சங்கங்களின் கோரிக் கையை ஏற்ற அமைச்சர், உடனடி யாக உயர்கல்வித்துறை செயலா ளர் வி. அருண் ராய், கல்லூரிக் கல்வி ஆணையர் பி. பொன் னையா, இணை இயக்குநர் பேராசி ரியர் ராமன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை நேரில் அழைத்தார். இதனைத் தொடர்ந்து, அன்று சங்கப் பொறுப்பாளர்களுடன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பணி மேம்பாட்டுத் திட்டம் குறிப் பது மட்டுமே முதன்மையாக விவா திக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சங்கங்களின் சார்பாக பின்வரும் நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்து களையும் கோரிக்கை களையும் விரிவாக எடுத்துரைத்தனர்: ஏயுடி சங்கத்தலைவர் காந்தி ராஜ், பொருளாளர் சார்லஸ் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் பேராசிரியர்கள் ஆனந்த், இராஜ சிம்மன், அருண்விவேக், மூட்டா சங்க பொதுச்செயலாளர் செந்தா மரைக்கண்ணன், பொருளாளர் இராஜசேகர் மற்றும் மண்டலப் பொறுப்பாளர் பேராசிரியர் சிவஞா னம், ஆசிரியர் சங்கப் பொறுப்பா ளர்களின் நியாயமான உணர்வு களையும், கோரிக்கைகளை கேட்ட றிந்த அமைச்சர், தகுதியுள்ள பேரா சிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்குவதற்கான அனைத்து நடவ டிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், இந்த செயல்பாடுகள் அனைத் தும் மிக விரை வாக முடித்து வைக் கப்படும் என்ற உறுதியையும் அளித்தார். அமைச்சரின் இந்த உடனடி நட வடிக்கையும், அதிகாரிகளுடனான ஆலோசனையும் தங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள் ளதாக தெரிவித்த சங்க நிர்வாகி கள், அமைச்சருக்கு நன்றி தெரி வித்தனர்.</p>
