தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீழவைப்பார், சிப்பிகுளத்தில் தூண்டில் வளைவை நீட்டித்திடுக! அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மீனவர்கள் கோரிக்கை

28 Jun 2026, 11:45 pm
கீழவைப்பார், சிப்பிகுளத்தில் தூண்டில் வளைவை நீட்டித்திடுக! அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மீனவர்கள் கோரிக்கை
<p><strong>கீழவைப்பார், சிப்பிகுளத்தில் தூண்டில் வளைவை நீட்டித்திடுக! அமைச்சர் ஸ்ரீநாத்திடம் மீனவர்கள் கோரிக்கை</strong></p><p>தூத்துக்குடி, ஜூன் 28- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் மற்றும் சிப்பிகுளம் மீனவ கிராமங்களில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அப்பகுதி மீனவ மக்கள் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். “மழைக்காலங்களிலும், பலத்த காற்று வீசும் நேரங்களிலும் கடற்கரையில் கட்டப்பட் டுள்ள நாட்டுப் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடைந்து சேதமடைகின்றன. மேலும், முகத்துவாரப் பகுதி முறையாகத் தூர்வாரப் படாததால் கடல் நீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடலில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு போதுமானதாக இல்லை. எனவே, கீழவைப்பாரில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள தூண்டில் வளைவை 100 மீட்டரும், சிப்பிகுளத்தில் உள்ள தூண்டில் வளைவை 200 மீட்டர் தூரத்திற்கும் நீட்டிக்க வேண்டும்” என மீனவர்கள் வலி யுறுத்தினர். அதேபோல், குளத்தூரில் இருந்து சிப்பி குளம் வரும் சாலை மிகவும் குறுகலாக வும், மோசமான நிலையிலும் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சாலையை அகலப்படுத்திச் சீரமைக்க வேண்டும் என்றும், படித்த மீனவ இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்த னர். கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர் ஸ்ரீநாத், அவைகளை முறையான மனுக் களாக எழுதித் தருமாறும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ெரிவித்து மனுக்களைப் பெற்றுக் கொண் டார். ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் புஷ்ரா ஷப்னம், மற்றும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.