மீனவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கி அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு
8 Jun 2026, 9:51 pm
<p><strong>மீனவர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கி அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 8 - கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் மேற்கு கடற்கரை மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக் கால நிவாரண உதவித்தொகை வழங்குதல் மற்றும் மீனவ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் விஜய கார்த்திகேயன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆஸ்டின் (நாகர்கோவில்), ந.தளவாய் சுந்தரம் (கன்னி யாகுமரி), முனைவர் தாரகை கத்பர்ட் (குளச்சல்), ஆர்.செல்ல சாமி (பத்மநாபபுரம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்து றை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், “மீனவ மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையில் ஆழ்கடல் மீன்பிடித்தலை நவீனப்படுத்தவும் கடற்பாசி வளர்ப்பை ஊக்கப் படுத்தவும், கடல் சுற்றுலாவை மேம் படுத்தவும், கடல் உணவுகளை பதப்படுத்தி விற்பனை செய்ய வும் கடல் அலை மற்றும் காற்று மின்சாரம் தயாரிக்கவும் கன்னியா குமரி - இராமேஸ்வரம் கடலோர பகுதிகள் நீலப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். இந் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மீனவப் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முதற்கட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக் கால நிவாரண உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாநிலத்திலேயே கன்னியா குமரி மாவட்ட மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித் தொழில் ஈடுபடுகின்றனர். இம்மாவட்டம் 71.5 கி.மீ கடற்கரை பகுதியை கொண்டதாகும். இதில் 42 மீனவ கிராமங்கள் சுமார் 1.43 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிப்பின் போது மீனவர்களை தொடர்பு கொள்ள ஏதுவாக தொலைத்தொடர்பு கருவிகளாகிய Satellite Phone, Transponder, VHF உள்ளிட்ட கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களின் பல்வேறு கோ ரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்திடவே நான் இங்கே வந்துள் ளேன். இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவ மக்களுக்கு ரூ.21.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் மீன்வளத்தை பாதுகாத்தி டும் பொருட்டு மீன்பிடி தடை காலத்தினை 61 நாட்கள் பின்வருமாறு கடைப்பிடித்திடவும். பாரம்பரிய மீன்பிடிகலன்கள் நீங்க லாக விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு ஆண்டு தோறும் தடை விதித்திடவும் அர சால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரை மீன்பிடி தடைக்காலமானது. திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் (கன்னியாகுமரி நகரம்) வரை, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை மீன்பிடி தடைகாலமானது, கன்னியாகுமரி முதல் நீரோடி மீனவ கிராமம் வரை, ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் கடைப்பிடிக்கப் படுகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவ ட்டத்தில் திங்களன்று 27,250 மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணமாக தலா ரூ.8000 வழங்கப்படுகிறது” என்றார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, கன்னியாகுமரி மாவட்ட மீன்வளம் மற்றும் மீன வர் நலத்துறை துணை இயக்கு நர் கோபிநாத், உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, துணை காவல் கண்காணிப்பாளர் கலைய ரசன், மீன்வளத்துறை செயற் பொறியாளர் தி.பிரேமலதா, உதவி இயக்குநர் தீபா மற்றும் துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.</p>
