நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் செங்குந்தபுரத்தில் கைத்தறி பூங்கா அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்
6 Dec 2025, 6:20 pm
<p><strong>நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் செங்குந்தபுரத்தில் கைத்தறி பூங்கா அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்</strong></p>
<p>அரியலூர், டிச.6 - தமிழ்நாடு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் 2023-2024 ஆம் ஆண்டு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரால், தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.5 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு அறிவிக் கப்பட்டதன் தொடர்ச்சியாக ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியில் ரூ.169.90 லட்சத்தில் வெள்ளியன்று 6500 சதுர அடி பரப்பளவில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க போக்குவரத்து மற்றும் மின்சா ரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சி யர் பொ.ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில் முதற்கட்டமாக அடிப்படை 50 கைத்தறிகள் செயல்படக் கூடிய வகையில் நெசவு தொழிற்கூடம், மூலப்பொருட்கள், கிடங்கு, நெசவிற்கு முந்தைய மற்றும் பிந்தைய பணிகளுக் கான அலுவலகம் மற்றும் நெசவாளர் களுக்கு குடிநீர் வசதி, சிற்றுண்டி வளா கம், வாகனம் நிறுத்தும் வசதி, ஓய்வறை, கழி வறை வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும் இந்த கைத்தறி பூங்கா அமைப்பதன் மூலம் செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல் மற்றும் மருதூர் பகுதிகளிலுள்ள கைத்தறி நெச வாளர்களும், கைத்தறி நெசவுதொழில் தெரிந்தும் வீட்டில் போதிய இடவசதி யின்மை காரணமாக நெசவுத் தொழிலை மேற்கொள்ள இயலாத நெசவாளர்களும், நெச வுக்கு முந்தைய பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களும் ஒரே இடத்தில் தங்கள் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் கிடைத்திட வழி வகை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி நெசவா ளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500-600 வரை வருவாய் ஈட்டும் அளவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செங்குந்தபுரம் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில், வருடத்திற்கு 75,000 மீட்டர் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.200 லட்சம் மதிப்பிலான ஜவுளி ரகங்கள் விற்பனை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.</p>
