தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு

15 Feb 2026, 3:03 pm
கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு
<p><strong>கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பாராட்டு</strong></p> <p>புதுக்கோட்டை, பிப். 15 &nbsp;கந்தர்வகோட்டை தொகுதி மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை என மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புகழாரம் சூட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை யின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து கட்டி முடிக்கப்பட்ட 20 கட்டடங் களைச் சனிக்கிழமை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். நூறாண்டு கால கனவை நனவாக்கியவர் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிய தாவது: &ldquo;மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த சின்னதுரையை எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுத்தீர்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்பை இந்த ஐந்து ஆண்டுகளில் மிகச் சரியாகப் பயன்படுத்திய சட்ட மன்ற உறுப்பினராக அவர் திகழ்கிறார். ஆத்தரங்கரைவிடுதிக்கும், வெள்ளாளவிடுதிக்கும் இடையே அக்னி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நூறாண்டு கால கனவு. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென சின்னதுரை கோரிக்கை வைத்தார். அதன்பேரில் ரூ.14.85 கோடி மதிப்பில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன் பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள் ளது. இதன் மூலம் சுமார் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்துத் துயரம் நீக்கப்பட்டுள்ளது.&rdquo; சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் மக்கள் குரல் &ldquo;தனது தொகுதி மேம்பாட்டு நிதி யைத் தாண்டி பல்வேறு வளர்ச்சித் &nbsp;திட்டப் பணிகளை அவர் மக்களுக் காகக் கொண்டு வந்துள்ளார். ஒவ் வொரு சட்டமன்றக் கூட்டத்தொடரி லும் தொகுதி சார்ந்த கோரிக்கை கள் மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து ஒட்டுமொத்த அவையின் கவனத்தை யும் ஈர்ப்பவராக எம்.சின்னதுரை எம்எல்ஏ விளங்குகிறார்&rdquo; என்று &nbsp;அமைச்சர் மெய்யநாதன் பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.