‘தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா’ அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
7 Dec 2025, 3:52 pm
<p><strong>‘தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா’ அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்</strong></p>
<p>சென்னை, டிச.7- தமிழ்நாட்டில் சாதி, மதம், இனம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டு இருக்கிறார் என்றும், இங்கு பாஜகவின் வெறுப்பு அரசியல் பகல் கனவாக மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, வட மாநிலங்களில் வெறுப்பு அரசியலை பரப்புவது போல், தமிழ்நாட்டிலும் பரப்ப பாஜக முயற்சிக்கிறது. தமிழ்நாட் டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் சனா தனத்தை அழிக்க வேண்டும் என கூற வில்லை, மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்றுதான் கூறுகிறோம். சமா தானத்தை போற்றும் அரசு இது என்றும், சனாதனத்தை மட்டுமே எதிர்க்கிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதிமுகவில் ஆளாளுக்கு ஒரு கோணத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒட்டுமொத்த மாக பாஜகவின் அடிமையாகி விட்டது என்று அமைச்சர் விமர்சித்தார். எச்.ராஜா போன்ற தரம் தாழ்ந்த அரசியல் வாதி தமிழ்நாட்டில் இருப்பது சாபக் கேடு என்றும், அவர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.</p>
