தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

79 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

22 Feb 2026, 3:26 pm
79 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
<p><strong>79 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்</strong></p> <p>திருவள்ளூர், பிப். 22- &nbsp;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. &nbsp;இதில் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு, தலா ரூ.1,01,800 மதிப்பீட்டில், மொத்தம் ரூ.80,42,200 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களைச் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திரு வள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சசி காந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை.சந்திர சேகர் (பொன்னேரி), மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சீ.குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.