தாமதமாக புறப்பட்ட அரசுப் பேருந்து புகார் செய்த பயணியிடம் அமைச்சர் அலட்சியமான பதில்!
28 May 2026, 9:46 pm
<p><strong>தாமதமாக புறப்பட்ட அரசுப் பேருந்து புகார் செய்த பயணியிடம் அமைச்சர் அலட்சியமான பதில்!</strong></p><p>சென்னை, மே 28 - சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், பேருந்து தாமதம் குறித்து புகார் கூறிய பயணியிடம் “நீ நல்லா சாப்பிட்டிருக்க; நான் இன்னும் சாப்பிடல” என ஒருமையில் பதிலளித்தது, பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் பண்டிகை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி விடுமுறையால் கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து 1,981 சிறப்பு பேருந்துகள் தென் மாவட்ட ங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வரவில்லை என்றும், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வரவில்லை என்றும் பயணிகள் அமைச்சரிடம் கடும் முறையீடு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் அளித்த அலட்சிய பதில் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய த்திற்குள் ஒரே வழியில் பேருந்துகள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மாற்று வழியில் பேருந்துகளை கொண்டுவர ஆய்வுக் கூட்டம் நடந்ததாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.</p>
