தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் அசுத்தம் மருத்துவர்களை கடிந்து கொண்ட அமைச்சர்

5 Dec 2025, 4:21 pm
கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் அசுத்தம் மருத்துவர்களை கடிந்து கொண்ட அமைச்சர்
<p><strong>கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் அசுத்தம் மருத்துவர்களை கடிந்து கொண்ட அமைச்சர்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, டிச. 5- இம்மாத இறுதிக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு வருகை புரியவுள்ளதை ஒட்டி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் சுகா தாரத் துறைப் பணிகளைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி, ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய 300 படுக்கைகள் கொண்ட கட்டிடப் பணியை அவர் வெள்ளியன்று ஆய்வு செய்தார். மேலும், ஏற்கெனவே உள்ள பழைய கட்டிடத்தைப் பார்வையிட்டபோது, மருத்துவமனை வளாகம் முழுவதும் அசுத்த மாக இருந்ததைக் கண்ட அமைச்சர், அங்கிருந்த மருத்துவர்களை அழைத்து, மருத்துவமனை வளாகம் ஏன் இவ்வளவு அசுத்தமாக உள்ளது எனக் கேள்வி எழுப்பி னார். தற்போது தூய்மை செய்யும் பணி நடைபெற்று வருவதால் உடனடியாகச் சரி செய்யப்படும் என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட மருத்துவ மனையின் பணிகளை அமைச்சர் பார்வை யிட்டார். இம்மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, தமிழ்நாடு முதல மைச்சரால் கட்டிடம் திறக்கப்பட உள்ள தாகக் கூறப்படும் நிலையில், அதன் முன்னேற்றத்தை அமைச்சர் உறுதி செய்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.