தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் திடீர் ஆய்வு நடத்துவேன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
7 Jun 2026, 11:13 pm

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் திடீர் ஆய்வு நடத்துவேன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

மதுரை, ஜூன் 7- மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஞாயிற்றுக் கிழமை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை வந்தார்.

பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

அமைச்சர் என்ற முறையை விட ஒரு சகோதரனாக இதை கூறுவதாகவும், இதை எச்சரிக்கையாக அல்லாமல் பொறுப்புணர்வாக அதிகாரிகளும் ஆசிரி யர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் இருப்பதால் அனைவரும் கூட்டுப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டு, புத்தகம் மற்றும் பள்ளிப் பைகள் சாலைகளில் வீசப்பட்ட தாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஏற்கனவே மாணவர்களுக்கு விருப்பமான பைகள் வாங்கிக் கொடுக்கப்பட்டிருந்த தால், சில மாணவர்கள் அரசின் பைகளை பயன்படுத்தாமல் விளையாட்டுத்தனமாக தூக்கி எறிந்ததாகவும், சமூக வலை தளங்களில் வெளியான வீடியோக்களைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் அவற்றை மீட்டு பாதுகாத்து, தேவையுள்ள மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

திமுக ஆதரவால் ஆட்சி நடைபெறுவ தாகவும், மூன்று மாதங்களில் ஆட்சி கவி ழும் என்றும் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “ஒரு மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான அவர் இவ்வாறு பேசி யிருக்கக் கூடாது” என்றார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய அங்கீ காரம் வழங்கும் வகையில் அமைச்சரவை யில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வன்னியரசு உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்ட பதவிகள் தனிநபர்களுக்கா னவை அல்ல, நீண்டகாலமாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தின் அடை யாளம் என்றும் அவர் கூறினார்

. இந்திய யூனி யன் முஸ்லிம் லீக்கிற்கு பல ஆண்டு களுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டிருப்பது குரலற்ற மக்களுக்கு குரலாக இருப்பதற்கான வெளிப்பாடு என்றார். நீட் விலக்கு தொடர்பான மசோதா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசனை கள் நடைபெற்று வருவதாகவும், அது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரி வித்தார்.