தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை

4 Jun 2026, 10:29 pm
விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை: அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை

ஈரோடு, ஜூன் 4-

ஈரோட்டில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட கருங்கல்பாளையம், வைராபாளையம், சுண்ணாம்பு

ஓடை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் சாயம் மற்றும் சலவைத் தொழிற்சாலைகள், ஆர்.என்.புதூர் பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை, மூலக்கரை பகுதியில் இயங்கி வரும் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் அமைச்சர் ராஜீவ் புதனன்று ஆய்வு மேற்கொண்டார். நிறுவனங்களுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூஜ்யநிலை கழிவுநீர் முறையினை தொடர்ச்சியாகவும், திறம்படவும் இயக்கி தொழிற்சாலை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை முழுவதுமாக தொழிற்சாலையின் மறு உபயோகத்திற்கே பயன்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சட்டவிதிகளின்படி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மூலமாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகள், கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாயக்கழிவுநீரை சுத்திகரிக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். சிப்காட் பகுதியில் உள்ள நிலத்தடி நீரினை எடுத்து, சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தநிறுவப்பட்டு வரும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என திட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.ஆனந்த் மோகன், டி.சண்முகன், சுற்றுச்சூழல் பொறியாளர் (பொ) ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.