முந்தய பக்கம்

84 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இ-பட்டா அமைச்சர செ.ராஜேஷ்குமார் வழங்கினார்

5 Oct 2026, 9:29 pm
84 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இ-பட்டா அமைச்சர செ.ராஜேஷ்குமார் வழங்கினார்

84 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை இ-பட்டா அமைச்சர செ.ராஜேஷ்குமார் வழங்கினார்

நாகர்கோவில், அக்.5 -கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் இலவச வீட்டுமனை இ-பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். ஏழுதேசம் “அ” வருவாய் கிராமம் கலிங்கராஜபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் விளிம்புநிலை மற்றும் ஆதிதிராவிட மக்களில் 84 பேருக்கு 0.67.20 ஹெக்டேர் நிலப்பரப்பில், ரூ.2.33 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனை இ-பட்டாக்கள் வழங்கப்பட்டன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைமனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளிம்புநிலை மக்களுக்கும் அரசு நலத்திட்டங்கள்சென்றடைய மாவட்ட நிர்வாகம் மூலம்தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram