மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் அதிகளவில் பணிகளை மேற்கொள்க! அரசுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
26 May 2026, 9:54 pm

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் அதிகளவில் பணிகளை மேற்கொள்க! அரசுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்

நாகர்கோவில்,மே 26- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தின் கீழ் அதிகளவில் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலு வலர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் அறி வுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தி ற்குட்பட்ட வருவாய்த்துறை, பொ துப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர் ச்சித்திட்ட பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் குளச் சல் சட்டமன்ற உறுப்பினர் முனை வர் தாரகை கத்பர்ட் முன்னிலை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மே 25 அன்று நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச் சர் செ.ராஜேஷ் குமார் துறை அலுவ லர்களுடன், ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வ லர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரும் முன்வைக்கும் கோரிக்கை யினை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென அறி வுறுத்தப்பட்டது.

தென்னையில் வெள்ளை பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகளுக்கு நில உடமை அடையாள அட்டைகள் 1,87,554 பதிவு செய்யப்பட்டுள்ளது

. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவர்களுக்காக செயல்படுத்தப் படும் மீன்பிடி தடைக்கால நிவாரண திட்டம், தேசிய மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம், இயந்திரம் பொருத்தப்பட்டு மீன்பிடி படகுகளுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள் அனைத்தும் மீனவர்களை உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவ லர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து மீன்வளத் துறை சார்பில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்திடுக பேரூராட்சிகள் சார்பில் நடை பெற்று வரும் கருங்கல் காமராஜர் பேருந்து நிலைய பணிகள், களியக்காவிளை ஒருங்கிணைந்த பேருந்து முனையப்பணிகள், பாலப்பள்ளம் புதிய பேருந்து நிலையம், தும்பக்கோடு பேருந்து நிலையம், உண்ணாமலை கடை, அழகப்பபுரம், பளுகல், கப்பி யறை, கடையால் இடைக்கோடு, வில்லுக்குறி, கீழ்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நகர்ப்புற மற்றும் துணை சுகாதார நிலைய பணிகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அதிகளவில் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது.

மேலும் நாடாளு மன்ற-சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டம், உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடை பெற்று வரும் அனைத்து பணிகளை யும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் எந்தெந்த திட்டங்கள் கொண்டு வந்தால் சிறப்பாக அமையும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரின் வழி காட்டுதலின் படி துறை அலுவலர் கள் கள ஆய்வு மேற்கொண்டு என் னென்ன திட்டங்கள் செயல்படுத்தி னால் நன்றாக அமையும் என்று நீங்கள் ஒரு அறிக்கை சமர்ப்பித் தீர்கள் என்றால் அதனை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தில் அந்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்வேன்.

தொடர்ந்து துறைவாரியாக திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந் தால் அதனை மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று என்னிடம் தெரி வித்தால் அந்தந்த துறை அமைச் சர்களிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப் படும்.

எனவே கன்னியாகுமரி மா வட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங் ்கோதை, மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் (பொ) மேரி பிரின்சி லதா, நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.