தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் ஆய்வு

29 Jun 2026, 8:57 pm
குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் ஆய்வு
<p><strong>குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் ஆய்வு</strong></p><p>நாகர்கோவில், ஜூன் 29 - கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி யத்தின்கீழ் பொது மக்களுக்கு குடி நீர் வழங்குவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் சுற்று லாத் துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கை யில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூ ராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும். அதுகுறித்து துறை அலுவலர்களுடன் கேட்ட றிந்ததோடு, சீரமைக்கப்பட வேண்டிய நீர்த்தேக்க தொட்டிகள், குழாய்கள் உள்ளிட்டவை உடனடி யாக சீர் செய்து தண்ணீர் வழங்கிட செயற்பொறியாளர் உள்ளிட்டோ ருக்கு அறிவுறுத்தப்பட்டது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதிககுட்பட்ட காப்பிக்காடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தின்கீழ் அமைக்கப் பட்டுள்ள நீர்தேக்க தொட்டியினை யும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வில்லுக்குறியை அடுத்துள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டி யினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு, இந்த நீர் தேக்க தொட்டி களின் வாயிலாக பொது மக்க ளுக்கு வழங்கப்படும் குடிநீர் முழு சுகாதாரத்துடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள் ளபட்டது. கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்ட நீர் தேக்க தொட்டிகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொ ண்டு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை தெளித்திட பொறி யாளர்கள், அலுவலர்கள், பணி யாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். நடைபெற்ற ஆய்வுகளில் விள வங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ற்றி.ற்றி.பிரவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியா ளர்கள் ராஜன், ஹரிகோவித், பொறி யாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.