தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்

11 Apr 2026, 5:30 am
சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்

சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரியின் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிதம்பரம், ஏப்.10- சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தைத் தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

கிராமங்கள் தோறும் பரப்புரை: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிமுன் அன்சாரி, இன்று குமாரட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர் பேட்டை, சிவபுரி, மடத்தான் தோப்பு, வெங்காயம் மேடு, வேலகுடி, பூலாமேடு, தவர்த்தம் பட்டு, அரசூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அமைச்சர் பங்கேற்பு: ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, தமிமுன் அன்சாரிக்கு ஆதரவாக வாக்குகளைச் சேகரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

கூட்டணி கட்சி நிர்வாகிகள்: இந்நிகழ்வில் திமுக மாவட்ட பொருளாளர் கதிரவன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி பால. அபிராமி, தேமுதிக மாவட்ட செயலாளர் உமாராந் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.