சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
10 Nov 2025, 5:08 pm
<p><strong>சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு</strong></p>
<p>சிதம்பரம், நவ 10- சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் சிதம்பரம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்சிக்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமை தாங்கி னார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச்சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்குட்பட்ட 36 குடி யிருப்புகளுக்குகொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக்கொண்டுகூட்டுக்குடிநீர்திட்டம், அம்ரூத் 2.0 மற்றும் ஜல் ஜீவன் மிஷன் நிதியின் கீழ் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ரூ.255.64 கோடி மதிப்பீட்டில் பணி கள் நடைபெற்று வருகிறது. 87 விழுக்காடு் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை கூடுதல் பணி யாளர்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அதேபோல் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.252.82 கோடி மதிப்பீட்டில் 139 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் 92 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 47 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய வீதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள், புறநகர் பேருந்து நிலையம், குளம் தூர்வாருதல், தினசரி காய்கறி சந்தை உள்ளிட்ட அனைத்து திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும் துரிதமாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவ லர்களை வலியுறுத்தினார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மாரியப்ப வினோத்ராஜா, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஜெயந்தி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலர் சிவக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
