தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உள்ளாட்சி தேர்தல்: தவெக தயாராக இருக்க அமைச்சர் நிர்மல்குமார் அறிவுறுத்தல்

4 Jul 2026, 10:34 pm
உள்ளாட்சி தேர்தல்: தவெக தயாராக இருக்க  அமைச்சர் நிர்மல்குமார் அறிவுறுத்தல்
<p><strong>உள்ளாட்சி தேர்தல்: தவெக தயாராக இருக்க அமைச்சர் நிர்மல்குமார் அறிவுறுத்தல்</strong></p><p>தேனி, ஜூலை 4- தமிழகத்தில் எப்போது வேண்டுமானா லும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். தவெகவினர் தயாராக இருக்க வேண்டும் என தேனியில் அமைச்சர் நிர்மல் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். தேனி வடக்கு மாவட்ட தவெக சார்பில் முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் பணி நியமனம் செய்யப்பட வில்லை. அரசு பணி நியமனம் மிக சொற் பமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தது. மக்களுக்கு செய்த துரோகத் திற்கு திமுகவினர் ஓரங்கட்டப்பட வேண்டி யவர்கள். அவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள்? மக்கள் விரோத செயல் களை செய்து ஊரை கொள்ளையடித்தார்கள். தேனி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக் கள் உள்ள போடி, ஆண்டிபட்டி தொகுதி களிலும் தவெக அரசின் நலத்திட்டப் பணி கள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும். மேலும் தேனி மாவட்டத்தில் சட்டவிரோத மாக இயங்கிய குவாரிகள் மூடப்பட்டுள் ளன. எப்போது வேண்டுமானாலும் உள் ளாட்சி தேர்தல் நடைபெறும், அதற்காக தவெகவினர் தயாராக இருக்க வேண்டும் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.