காவல் மரணங்களில் சமரசம் இல்லை! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி
16 Jul 2026, 9:12 pm

காவல் மரணங்களில் சமரசம் இல்லை! அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி

சென்னை, ஜூலை 16 - காவல் மரணங்களில் அரசு சமரசம் செய்யாது என வும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி அளித்துள்ளார். தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், இதனைத் தெரிவித் தார். தவறு நடந்தது உறு தியானால் சம்பந்தப்பட்ட வர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றார்.

புழல் சிறையில் அண் மையில் நிகழ்ந்த மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில் உயிரிழந்த நபருக்கு உடல்நலப் பிரச்ச னை இருந்ததாகத் தெரிய வந்துள்ள போதிலும், அதி காரிகள் தரப்பில் ஏதேனும் தவறு கண்டறியப்பட்டால் அவர்கள்மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறினார்.

பழனி பத்திரப்பதிவு விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், புறம்போக்கு நிலங்கள், ஏரி நிலங்கள், கோ வில் நிலங்கள் தொடர்பான சட்டவிரோதப் பதிவுகளை யும், தமிழகம் முழுவதும் நடைபெறும் போலிப் பத்திர மோசடிகளையும் தடுக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். பொதுமக்கள் தகவல் அளித்தால் உட னடியாகப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.