அதிமுக, திமுகவின் பேராசையால் இயற்கை வளங்கள் கொள்ளை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
28 Jun 2026, 9:26 pm
<p><strong>அதிமுக, திமுகவின் பேராசையால் இயற்கை வளங்கள் கொள்ளை: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு</strong></p><p>மதுரை, ஜூன் 28- அதிமுக மற்றும் திமுகவின் பேராசை யால் தமிழ்நாட்டின் இயற்கை வளங் கள் பெருமளவில் கொள்ளையடிக்கப் பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மேலூரில் குற்றம் சாட்டியுள்ளார். </p><p>முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர், சோதனை நடந்த இடங்களில் பல்லா யிரக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், திமுக மற்றும் அதிமுக தலை வர்கள் தங்களது குடும்பச் சொத்துக் களைப் பாதுகாக்கவும், ஊழலை மறைக்க வும் திரைமறைவில் குதிரை பேரத்தில் ஈடு பட்டு இணைந்து ஆட்சி அமைக்க முயல்வ தாகவும், இதனால்தான் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் வெளியேறி வருகின்றன என்றும் கூறினார். மதுரையைச் சுற்றியுள்ள மலைகள் கிரானைட் கொள்ளையால் வெட்டிப் பாழாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், இயற்கை வளங் களைக் கொள்ளையடித்தவர்களை இந்த அரசு மன்னிக்காது என்றும், கிரானைட் வழக்குகளை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.</p>
