முந்தய பக்கம்

100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்!

8 Jul 2026, 1:29 am
100 நாள் வேலைத் திட்டப் பணிகளை  ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்!
<p><strong>100 நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என்.ஆனந்த்!</strong></p><p>விழுப்புரம், ஜூலை 7- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம், வி.சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) நடைபெற்று வரும் 125 நாள் பணியினை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் பணிகளை ஆய்வு செய்ததுடன், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் திட்டத்தின் செயல்பாடு மற்றும் ஊதியம் குறித்துக் கேட்டறிந்து கலந்துரையாடினார். பணி நடைபெறும் இடத்தின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram