முந்தய பக்கம்

ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு

30 Mar 2026, 3:40 pm
ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு
<p><strong>ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு</strong></p> <p>ஈரோடு, மார்ச் 30- ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வாக்கு சேகரிப்பை தொடங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு மேற்கு &nbsp;சட்டமன்றத் தொகுதியில் திமுகவின் சார்பில் அமைச்சர் சு.முத்துசாமி போடடியிடுகிறார். இவர் திங்களன்று காலை திண்டல் பகுதியில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார். காரப்பாறை, புதுகாலனி, கீழ் திண்டல், மேல் திண்டல், வித்யா நகர் மற்றும் லட்சுமி கார்டன் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பெண்கள் ஆரத்தியுடன் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர். ரவி, மாதப்பன், சுரேஷ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்ட கூட் டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram