அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு
6 Apr 2026, 5:37 pm
<p><strong>அமைச்சர் முத்துசாமி வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>ஈரோடு, ஏப்.6- ஈரோடு மேற்கு தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி, ஈரோடு ஒன்றியம் மற்றும் சூரம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச் சருமான சு.முத்துசாமி ஞாயிறன்று ஈரோடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலும், சூரம் பட்டி, ஸ்டாலின் வீதி, காந்தி வீதி, ஜுவா வீதி, திருவிக சாலை, பாண்டியன், கோவலன் வீதி, கட்டபொம்மன் வீதி, நேதாஜி வீதி, பாரதி வீதி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் மற்றும் திர ளான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
