முந்தய பக்கம்

அமைச்சர் மகேஸூக்கு வெள்ளி யானை விருது!

27 Nov 2025, 3:26 pm
அமைச்சர் மகேஸூக்கு வெள்ளி யானை விருது!
<p><strong>அமைச்சர் மகேஸூக்கு வெள்ளி யானை விருது!</strong></p> <p>சென்னை, நவ. 27 - பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் சமூக வலைத்தளப் பதிவில், &ldquo;எனக்கு வழிகாட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்த விருதின் பெருமை சேரும், அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்&rdquo; என்று தெரிவித்துள்ளார். மேலும், &ldquo;பாரத சாரண-சாரணிய வைர விழா மற்றும் கலை ஞர் நூற்றாண்டு பெருந்திரள் பேரணியை திருச்சியில் இந்தியாவே வியக்கும்படி நடத்தி காட்டுவதற்கு தமிழ்நாடு சாரணர்கள் செய்த பங்களிப்பின் விளைச்சல் தான் இந்த விருது&rdquo; என்றும், &ldquo;இந்த விருதை சாரணர் களின் உழைப்புக்கு அர்ப்பணிக்கிறேன், வெள்ளி யானை விருது தந்துள்ள உற்சாகத் தோடு தமிழக மாணவர்களின் நலனுக்கு மேலும் சிறப்பாக உழைக்க ஊக்கம் பெறுகிறேன்&rdquo; என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்த விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து பெற்றார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram