இராமநாதபுரத்தில் தொழில்முனைவோர் கண்காட்சி அமைச்சர் பெ.மதன் ராஜா துவக்கி வைத்தார்
10 Jul 2026, 9:07 pm
<p><strong>இராமநாதபுரத்தில் தொழில்முனைவோர் கண்காட்சி அமைச்சர் பெ.மதன் ராஜா துவக்கி வைத்தார்</strong></p><p>இராமநாதபுரம்,ஜூலை 10- இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உரப்புளி சிட்கோ தொழிற்பேட்டையில் ஜூலை 10 அன்று குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார். ஆய்வின்போது, சிட்கோ தொழிற் பேட்டையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள், தொழில்முனைவோருக்கு வழங்கப் பட்டுள்ள அடிப்படை வசதிகள், தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திற்கான முன்னேற்றப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தொழில் நிறுவ னங்கள் சிறப்பாக செயல்பட தேவை யான அனைத்து வசதிகளையும் விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம், செய்யது அம்மாள் பொறி யியல் கல்லூரியில்; இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம் பாட்டுத் துறை (DPIIT), Startup India, StartupTN மற்றும் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய TEJAS (Transforming Entrepreneurial Journeys Across States & Districts) தொழில்முனைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன், மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் அதீஷ் குமார் சிங், IRTS, ஆகியோர் முன்னிலையில், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறை அமைச்சர் பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் நிதி ஆயோக் திட்ட தலைவர் அனிஷ் ஜாண்பால் செய்யது அம்மாள் பொறியிளல் கல்லூரி தலைவர் மரு.சின்னதுரை அப்துல்லா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
