தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.4.37 கோடி மதிப்பில் புதிய வசதிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

10 Jan 2026, 2:48 pm
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.4.37 கோடி மதிப்பில் புதிய வசதிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
<p><strong>மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ரூ.4.37 கோடி மதிப்பில் புதிய வசதிகள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்</strong></p> <p>மதுரை, ஜன.10- மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் தேசிய சுகா தார இயக்கம் மற்றும் மாநில சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ வசதிகள் சனிக்கிழமை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இதில், ரூ.93.50 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட உடற்கூறாய்வு மையம், &nbsp;ரூ.2.81 கோடி மதிப்பில் 16 ஸ்லைஸ் முழு உடல் சி.டி. ஸ்கேனர், ரூ.62 லட்சம் மதிப்பில் 800 எம்ஏ (mA) திறன் கொண்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி ஆகியவை அடங்கும். &nbsp;இந்த வசதிகளை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகி யோர் திறந்து வைத்து பார் வையிட்டனர். நிகழ்ச்சியில் அரசு கூடு தல் தலைமைச் செயலாளர் ப.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை தெற்கு எம்எல்ஏ மு.பூமிநாதன், மாநகராட்சி மேயர் (பொ) தி. நாகராஜன், அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த ஆண்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சி.டி. ஸ்கேன்கள் &nbsp;செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிர மணியன், கடந்த ஓராண்டில் மட்டும் இம்மருத்துவமனை யில் 1.5 லட்சத்துக்கும் மேற் பட்ட சி.டி. ஸ்கேன்கள், 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட டிஜிட்டல் எக்ஸ்ரேக்கள் மற்றும் 15,680 எம்.ஆர்.ஐ. பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு பொறுப் பேற்றதிலிருந்து இதுவரை ரூ.420 கோடி மதிப்பில் மருத்துவக் கட்டிடங்கள் மற்றும் உயர் மருத்துவ உப கரணங்கள் வழங்கப்பட்டுள் ளதாகவும், ஜைக்கா நிதியுத வியுடன் ரூ.313.25 கோடி செலவில் ஆறு தளங்களைக் கொண்ட புதிய டவர் பிளாக் கட்டப்பட்டு திறக் கப்பட்டுள்ளதாகவும் கூறி னார். &lsquo;நலம் காக்கும் ஸ்டாலின்&rsquo; திட்டம் மாநிலம் முழுவதும் 1,256 இடங்களில் &lsquo;நலம் காக்கும் ஸ்டாலின்&rsquo; முழு உடல் பரிசோதனை முகாம் கள் நடத்தப்பட்டு, இதுவரை 14.21 லட்சம் பேர் பயனடைந் துள்ளதாகவும், மதுரை &nbsp;மாவட்டத்தில் மட்டும் &nbsp;33,758 பேர் பயனடைந்துள்ள தாகவும் அமைச்சர் தெரி வித்தார். மதுரை எய்ம்ஸ் 2027இல் நிறைவு மதுரை எய்ம்ஸ் மருத்து வக் கல்லூரி கட்டுமானப் பணிகள் ஜைக்கா நிதியுடன் நடைபெற்று வருவதாகவும், 2027ஆம் ஆண்டுக்குள் பணிகள் நிறைவடையும் என ஒன்றிய அரசு தெரி வித்துள்ளதாகவும் அமைச் சர் கூறினார். பொங்கலுக் குள் எய்ம்ஸ் செயல்பட வாய்ப்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜல்லிக்கட்டு மருத்துவ ஏற்பாடுகள் ஜல்லிக்கட்டு நடை பெறும் இடங்களிலேயே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடனடி சிகிச்சை வழங்கப்படுவ தாகவும், பெரிய காயம் &nbsp;அடைந்தவர்கள் மட்டுமே மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்படு வதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.