முந்தய பக்கம்

மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் நினைவரங்கம் அமைக்க அமைச்சர் அடிக்கல்

7 Feb 2026, 5:37 pm
மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் நினைவரங்கம் அமைக்க அமைச்சர் அடிக்கல்
<p><strong>மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் நினைவரங்கம் அமைக்க அமைச்சர் அடிக்கல்</strong></p> <p>சிதர்பரம், பிப்.7- பரங்கிப்பேட்டையில் ரூ.34 லட்சத்தில் மொழிப்போர் தியாகி மு.ராஜேந்திரன் நினைவரங்கம் அமைக்கும் பணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். &nbsp;முன்னதாக, ராஜேந்திரன் நினை விடத்தைச் சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி, பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தார். இக்கோரிக்கையை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதை யடுத்து, கடந்த ஆண்டு கடலூர் வந்த முதல்வர், மாவட்ட வளர்ச்சிக்கான 10 அறி விப்புகளில் ஒன்றாக இந்த நினைவிடப் புதுப்பிப்புப் பணியை அறிவித்தார். தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இவருடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் தேன்மொழி சங்கர் மற்றும் துணைத் தலைவர் முகமது யூனுஸ், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்ட &nbsp;கட்சியினர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram