வழித்தடங்களில் புதிய பேருந்துகள் ஓசூரில் அமைச்சர் தொடங்கி வைத்தார்
11 Mar 2026, 4:32 pm
<p><strong>வழித்தடங்களில் புதிய பேருந்துகள் ஓசூரில் அமைச்சர் தொடங்கி வைத்தார்</strong></p>
<p>கிருஷ்ணகிரி, மார்ச் 11- ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் பேருந்து விடுதல், தடங்கள் நீட்டிப்பு மற்றும் மாற்றத்திற்கான விடியல் பயணப் பேருந்துகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். சூளகிரி ஊராட்சி ஒன்றியம் இம்மிடிநாயக்கனபள்ளி, மேலுமலை, காளிங்காபுரம் ஆகிய ஊராட்சிகளில் 1 கோடியே 54 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு, குடிநீர் பைப் லைன், சிமெண்ட் சாலை, கல்வெட்டு, தடுப்புச் சுவர் முதலிய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகராட்சி ஆர்.வி.எஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தன் சொந்த நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாணவர்கள் உணவு அருந்தும் கூடத்தை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். ஓசூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுதேப்பள்ளி, தென்றல் நகர், கோகுல் நகர் பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக் கடைகளைத் திறந்து வைத்து, ஓசூர் ஊராட்சி ஒன்றியம் தொரப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, குமுதேப்பள்ளி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக 5 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகள் உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான பணி</p>
