சேலத்தில் 10 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>சேலத்தில் 10 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்</strong></p>
<p>சேலம், நவ.28- சேலம் நகரப் பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 10 புதிய BS-6 நகரப் பேருந்துகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்தி ரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் மற்றும் பொதுமக்க ளின் நலன் கருதி, 8 நகரப் பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றியமைக்கப்பட்டன மற்றும் 12 பேருந்துகளின் வழித்தடங்கள் நீட்டிக்கப்பட்டன. இதுதவிர, 3 புதிய பேருந்து நிறுத்தங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட் டன. இந்நிகழ்வில், பணியின் போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களின் 22 வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தா தேவி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதி காரிகள் பங்கேற்றனர்.</p>
