திமுக வேட்பாளர் க.அன்பழகனுக்கு ஆதரவாக அமைச்சர் கோவி.செழியன் வாக்குச் சேகரிப்பு
4 Apr 2026, 4:02 pm
<p><strong>திமுக வேட்பாளர் க.அன்பழகனுக்கு ஆதரவாக அமைச்சர் கோவி.செழியன் வாக்குச் சேகரிப்பு</strong></p>
<p>கும்பகோணம், ஏப். 4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் 4 ஆவது முறையாக போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், கும்பகோணம் ரயில் நிலையம் அருகில் இளங்கா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அமைச்சர் கோவி. செழியன் கும்பகோணம் வேட்பாளர் கா. அன்பழகனுக்கு ஆதரவு தெரிவித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார். இதில் சட்ட திட்ட குழு தலைவர் கல்யாணசுந்தரம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
