தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்

23 May 2026, 10:23 pm
விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்

விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய அமைச்சர் கீர்த்தனா காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட குறைகளை சரி செய்திடுக: அரசு ஊழியர் சங்கம்

விருதுநகர், மே 23- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாக வும் பதவி ஏற்றனர்.

இதில் தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பதவி ஏற்றார்.

இந்நிலையில் விடு முறை தினமான சனிக்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதனால் வேறு வழியின்றி அரசு அலுவலர்கள் ஆட்சி யரகத்திற்கு வந்தனர்.

ஏற்கனவே, அறி விக்கப்பட்ட நேரத்தை தாண்டி 2 மணி நேரம் காலதாமதமாக அமைச்சர் கீர்த்தனா வந்தார்.

இதனால் அரசு அலுவலர்கள் அதிருப்திய டைந்தனர்.

கூட்டம் முடிந்த பின்பு, அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதல் முறையாக தொழிற்துறை குறித்த அறிமுகக் கூட்டம் தான் நடை பெற்றது என்றார்.

பின்பு, நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு, கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.

அப்போது தான் டைடல் பார்க், பல் மருத்துவ கல்லூரி, பி.எம் மித்ரா திட்டம் ஆகியவை குறித்து சரி யாக பதில் கூறுவேன்.

ஏனோ தானோ எனப் பதில் கூறக் கூடாது எனத் தெரிவித்தார்.

கோவையில் உள்ள சூலூரில்10 வயது சிறுமி கொடூரமான முறையில் கொலை செய் யப்பட்டுள்ளாரே என்ற கேள்விக்கு, தலை வர் என்ன முடிவு எடுத்தாலும் சரியாக இருக்கும் என பதில் கூறினார்.

அரசு ஊழியர்கள் கோரிக்கை இந்நிலையில், விடுமுறை தினத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அரசு மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்வது என்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், அரசு அலுவலகங்களில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன.

ஏராளமாய் மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் அதற்கேற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

ஏற்கனவே இருக்கின்ற பணியிடங்களில் 5 லட்சத்திற்கும் மேல் காலியாக உள்ளது

. அதை நிரப்பாமல் தனியார் முகமை மூலமும் ஒப்பந்த வழியிலும் நியமனங்கள் நடைபெற்று வருகிறது.

உதாரணமாக, சத்துணவு திட்டத்தில் 60 சதவிகிதம் காலிப் பணியிடங்கள் உள் ளன

. இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்க ளுக்கான சத்துணவுத் திட்டத்தில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

பணியாளர்கள் இல்லை மேலும், மருத்துவமனைகளில் மருத்து வர் முதல் செவிலியர் உள்ளிட்ட பணியா ளர்கள் வரை ஏராளமான பணியிடங்கள் காலி யாக உள்ளன.

ஆனால், ஒப்பந்தமுறை, அவுட் சோர்சிங் முறையில் நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனால், மருத்து வமனை கட்டடங்கள் பிரம்மாண்டமாய் இருந்த போதிலும் உள்ளே பணிபுரிய ஆட் கள் இல்லாத நிலையே மாநிலம் முழுவதும் உள்ளது.

வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளிலேயே தனியார்மயம் விரிவடைந்து வருகிறது.

இதனால் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மிகவும் பின்னடைவு ஏற்படுகிறது.

குற்றவாளிகளாக சித்திரிக்க வேண்டாம் இதுபோன்ற ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு புதிதாக பெறுப்பேற்ற ஆட்சியும் ஆட்சியாளர்களும் அரசு ஊழி யர்களை மக்கள் மத்தியில் குற்றவாளி களைப் போல் சித்தரிப்பது, பொதுமக்களி டம் அரசு ஊழியர்கள் மீதான பார்வையை மோசமாக்கும்.

மேலும், வீடியோ மூலமாகவும் செய்தியா ளர்களை வைத்துக் கொண்டும் விளம்ப ரத்திற்காக நடத்தும் ஆய்வினால் அரசு ஊழி யர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவ தால் எவ்வித தீர்வும் ஏற்படாது.

எனவே அரசு அலுவலக தினங்களில் அமர்ந்து ஆய்வுகளை நடத்தி, திட்டங்கள் அனைத்தும் சரியாக மக்களை சென்ற டைய செய்திட வேண்டும்.

அதற்கு அரசு ஊழி யர்கள் 100 சதவிகிதம் தயார் நிலையில் உள் ளோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.