சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா!
11 May 2026, 10:39 pm

சான்றிதழை எடுத்து வராத அமைச்சர் கீர்த்தனா!

தவெக அமைச்சரவையில், 30 வயதே யான இளம் அமைச்சரான கீர்த்தனா சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்றவர்.

இவர், சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்க வருமாறு, அமைச்சர்கள் வரிசையில் கடைசியாக அழைக்கப்பட்டார்.

பதவி யேற்பு மேடைக்குச் சென்ற அவரிடம், சட்ட மன்றச் செயலாளர் சீனிவாசன், தேர்தல் ஆணையம் அளித்த வெற்றிச் சான்றி தழை கேட்டார்.

ஆனால், அமைச்சர் கீர்த்தனா சான்றிதழ் எடுத்துவரவில்லை. தங்கியிருந்த ஹோட்டலிலேயே வைத்து விட்டு வந்திருந்தார்.

இதனால், சில மணி நேரத்திற்கு பிறகு, சான்றிதழை எடுத்து வந்து கொடுத்து, பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்டார்.

சில நாட் களுக்கு முன்பு, ஊடகங்களிடம் தமிழில் பேசாமல் இந்தியில் பேசி கீர்த்தனா சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

சான்றிதழை எடுத்து வராத எம்எல்ஏ-க்கள் அமைச்சர் கீர்த்தனா மட்டுமல்லா மல், தவெகவைச் சேர்ந்த சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ சிவக்குமார், சோழிங்கர் தொகுதி எம்எல்ஏ ஈ.சி.ஆர். சரவணன், பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ காமாட்சி ஆகியோரும் சான்றிதழை எடுத்து வராததால், பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதிமுகவின் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ உஷாராணி, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் ஆகி யோரும் சான்றிதழை எடுத்துவராததால், அவர்கள் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற 15 நாட்களுக் குள் பதவியேற்றுக்கொள்ள வேண்டும்.

பதவியேற்க வரும்போது, சான்றிதழை எடுத்துவர வேண்டும் என்று முதல் நாளே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

எனினும், பலர் எடுத்து வராதது பதவியேற்பின் போது சலசலப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, வேளச்சேரி தொகுதி தவெக எம்எல்ஏ குமார் என்பவர் பக்கத்தில் இருந்த மற்றொரு எம்எல்ஏ-வின் வெற்றிச் சான்றிதழை, மாற்றி எடுத்துச் சென்றார்.

இதனை முதன்மைச் செயலா ளர் கண்டுபிடித்து கூறியதும், பின்னர், தனது சான்றிதழை தேடிக் கொடுத்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இந்த சம்பவம் பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.