தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு மீண்டும் திமுக ஆட்சி அமைய அச்சாரமாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

3 Jan 2026, 4:57 pm
டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு  மீண்டும் திமுக ஆட்சி அமைய அச்சாரமாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு  மீண்டும் திமுக ஆட்சி அமைய அச்சாரமாக அமையும் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தஞ்சாவூர், ஜன.3-
டெல்டா மகளிர் அணி மாநாடு மீண்டும் திமுக ஆட்சி அமைய அச்சாரமாக இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தஞ்சாவூரை அடுத்த செங்கிப்பட்டி அருகே, “வெல்லும் தமிழ் பெண்கள்’’ திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு, ஜன.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை வகிக்கிறார். இதில் திமுக தலைவரும், முதல்வமாருான மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.
இதையொட்டி, டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம், தஞ்சாவூரில் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகரன் வரவேற்றார்.
திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்து பேசுகையில், “டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டுக்கு, மகளிரை அதிகம் அழைத்து வருவதாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர். டெல்டாவில் 12 ஆயிரத்தும் மேற்பட்ட பூத்துகள் இருக்கின்றன. இதனால் 1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ளக்கூடிய சிறப்பு மாநாடாக இது அமையும்.
டெல்டா என்றாலே தஞ்சாவூர்தான் தலைமையிடம் என்பதால் மாநாட்டை இங்கே நடத்துகிறோம். இந்த மகளிர் அணி மாநாடு மீண்டும் திமுக ஆட்சி அமைய அச்சாரமாக அமையும். ஜன.19 ஆம் தேதி நடக்கும் மகளிர் அணி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், அமைச்சர்கள், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.