தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு வாக்கு சேகரிப்பு

4 Apr 2026, 4:02 pm
திருச்சி மேற்கு தொகுதியில்  அமைச்சர் கே.என். நேரு வாக்கு சேகரிப்பு
<p><strong>திருச்சி மேற்கு தொகுதியில் &nbsp;அமைச்சர் கே.என். நேரு வாக்கு சேகரிப்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 4- &nbsp;திருச்சி மேற்கு சட்ட மன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேரு சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேற்கு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 51 ஆவது வார்டுக்கு உட்பட்ட செடல் மாரி யம்மன் கோவில் தெரு, ரெட்டி தெரு, பொன்விழா நகர், தேவர் புதுதெரு, ஹீபர் ரோடு, கூனி பஜார் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கே.என்.நேரு, தனது ஆதரவாளர்களுடன் மக்களை சந்தித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தின் போது, அப்பகுதி மக்கள் அவருக்குச் சால்வை அணிவித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதே நோக்கம் எனவும், கடந்த காலங்களில் செய்த நலத்திட்டங்க ளையும், வருங்கால வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். &nbsp;சிபிஎம் அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு &nbsp;மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, சனிக்கிழமை வெண்மணி இல்லத்தில், சிபிஎம் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிகழ்வின் போது, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச் செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாநகர், புறநகர் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் சிஐடியு-வினர், வெகுஜன அமைப்பினர் உட்பட பலரும் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.