நிகழ்ச்சிக்கே வராத அமைச்சரின் பெயரை பேனரில் முதலில் அச்சிடுவதா? அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி
26 Jun 2026, 10:45 pm

நிகழ்ச்சிக்கே வராத அமைச்சரின் பெயரை பேனரில் முதலில் அச்சிடுவதா? அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி

நிகழ்ச்சிக்கே வராத அமைச்சரின் பெயரை பேனரில் முதலில் அச்சிடுவதா? அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரிநிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அமைச்சர் கீர்த்தானாவின் பெயர் முதலிலும் இரண்டாவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இடம் பெற்றி ருந்தது. இதனால்,ஜெகதீஸ்வரி ஆவேச மடைந்தார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண் அமைச்சர்களுக்கு இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வந்தது. இந்நிலையில், விருதுநகரில் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை சார்பாக சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு, துறை அமைச்சர் ஜெக தீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட நிர்வா கத்தால் வைக்கப்பட்டிருந்த பதாகையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாக வும், முதலிடத்தில் அமைச்சர் கீர்த்தனா வின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு கடும் கோபமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “நிகழ்ச்சிக்கே வராத, அதுமட்டுமல்ல எனது துறைக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒருவரின் பெய ரைப் பதாகையில் முதலில் போட்டி ருப்பது என்ன நியாயம்?, நான் வேண்டு மானால் எழுந்து சென்று விடவா” என மாவட்ட ஆட்சியரிடம் மேடையிலேயே கேள்வி எழுப்பினார். மேலும், “இதுபோன்ற தவறுகளைச் செய்யக் கூடாது என ஏற்கனவே உங்களி டம் பலமுறை கூறியுள்ளேன். ஆனால், தொடர்ந்து இதே தவறைச் செய்கிறீர்கள்” எனக் கூறி, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரையும் நேரில் அழைத்து அமைச்சர் ஜெகதீஸ்வரி கடுமையாகக் சாடினார். விருதுநகர் மாவட்ட தவெக பெண் அமைச்சர்களுக்குள் நிலவி வந்த பனிப்போரானது, தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சருக்கு உடல்நலக்குறைவு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி யில் நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் போதைப்பொருளுக்கு எதி ரான ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பங்கேற்ற தமிழக சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தாய்மார் கள் மற்று குழந்தைகளுக்கான பெட்ட கத்தை வழங்கினார். அப்போது தலை சுற்றல் இருப்பதாக அருகில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெய்சிங்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அறையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்த னர். பின்பு,சில மணி நேரத்தில் அவர் குணமடைந்து விடு திரும்பினார்.