பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு
4 Jul 2026, 12:48 am

பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 3- ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லுாரி சமூக நீதி விடுதிகளில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற் கொண்டார்.

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி, சிவபுரத்திலுள்ள கல்லூரி மாணவர் விடுதி, அவல்பூந்துறை பள்ளி மாணவி யர் விடுதி, வேலம்பாளையம் கல்லூரி விடுதி, வடமுகம் வெள்ளோடு பள்ளி மாணவர் விடுதி, பெருந்துறை பள்ளி மாணவியர் விடுதி மற்றும் பெருந்துறை பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதி களில் அமைச்சர் வெ.சம்பத்குமார் வெள்ளியன்று ஆய்வு செய்தார்.

மேலும், தங்கி பயிலும் மாணவ, மாண வியர்களுக்கு வழங்கப்படும் உணவு, உணவுப் பொருட்களின் தரம், மின் விளக்கு, சுகாதாரம், சமையலறை பரா மரிப்பு, படிப்பறைகள், கண்காணிப்பு கேமரா, விளையாட்டு உபகரணங்கள், முதலுதவி பெட்டி, புகார் பெட்டி, குடி நீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அமைச் சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூடுதல் வசதி குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், மாணவர்கள் நல்ல முறை யில் பயன்படுத்தி படித்து அனைத்து துறைகளிலும் சிறக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

விடுதி வளாகத்தை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

முதலுதவி பெட்டியில் காலாவதியான மருந்துகள் இருக்கி றதா என ஆய்வு செய்து, சரியான மருந்துகளை வைத்திருக்க வேண்டும்.

புகார் பெட்டியில் வரும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜாகீர் உசேன் உட்பட தொடர் புடைய துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.