தீக்கதிர் செய்தி எதிரொலி திருவையாறு பகுதியில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி
2 Jun 2026, 9:52 pm
<p><strong>தீக்கதிர் செய்தி எதிரொலி திருவையாறு பகுதியில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி </strong></p><p>தஞ்சாவூர், ஜுன் 2- தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தின் திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் சனியன்று முதல் சூறைக் காற்று வீசியது. இதில் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதுதொடர்பாக கணபதி அக்ரஹாரத்தில் 12 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவ சாயி ஜெய்சங்கர் கூறுகையில், “என்னு டைய வயலில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. வாழை மரத்தில் காய்த்திருந்த ரஸ்தாளி, செவ்வாழை முற்றும் முன்னரே சாய்ந்து விட்டது. அரசு, ஏக்கருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். இதே போல பல விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பான செய்தி தீக்கதிரில் வெளியாகியது. 822 ஹெக்டேர் பரப்பளவு இந்நிலையில், சூறாவளிக் காற்றால் பாதிப்படைந்த வாழை மரங்களை, மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி முன்னிலையில், சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் அ.மு.ஷாஜகான் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: பருவ நிலை மாற்றம் காரணமாக இயற்கை சீற்றங்கள் தொடர்வது வருத்த மளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசத்தில் 432.97 ஹெக்டேர் பரப்பள விலும், திருவையாறில் 295.75 ஹெக்டேர் பரப்பளவிலும் என மொத்தம் 728.72 ஹெக்டேர் பரப்பள வில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இதில், தோட்டக்கலைத் துறை அலு வலர்கள் இதுவரை நடத்திய ஆய்வின்படி, சுமார் 822 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் பாதிப்ப டைந்துள்ளதாகக் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்புப் பணி மேலும் நான்கு நாட்களுக்குத் தொட ரும். பணிகள் முழுமையாக நிறை வடைந்ததும், இதுகுறித்த அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை எளிதாகப் பெறும் வகை யில் நடைமுறைகளை எளிமைப் படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நெல் உலர்கூடம், புஞ்சை பயிர்களுக்கான விற்பனைக்கூடங்கள் மற்றும் மலர் விற்பனைக் கூடம் அமைக்கக் கோரி விவசாயிகளி டமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இவை குறித்தும் பரிசீலித்து, முத லமைச்சரின் ஒப்புதலோடு அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்’’ என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நெ.செல்வம், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கோ. வித்யா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.</p>
