திருச்சுழி தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
25 Feb 2026, 3:22 pm
<p><strong>திருச்சுழி தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்</strong></p>
<p>திருச்சுழி, பிப்.25- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகு திக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற் றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூ.9.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக் கப்பட்டது. அதேபோல், குரண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.29.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை களையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
