தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆத்தூர் தொகுதியில் 21,000 வாக்குகள் நீக்கம் பாஜக தூண்டுதல் பேரில் சதி : அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

30 Nov 2025, 3:38 pm
ஆத்தூர் தொகுதியில் 21,000 வாக்குகள் நீக்கம் பாஜக தூண்டுதல் பேரில் சதி : அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
<p><strong>ஆத்தூர் தொகுதியில் 21,000 வாக்குகள் நீக்கம் பாஜக தூண்டுதல் பேரில் சதி : அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு</strong></p> <p>திண்டுக்கல், நவ.30&ndash; ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் &lsquo;இடமாறுதல்&rsquo; எனக் குறிப்பிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் மற்றும் ஆத் தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் ஆகி யோர் நீக்கியிருப்பது ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் பேரில் நடைபெறும் சதி என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் லில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் அவர் மேலும் &nbsp;கூறுகையில், &ldquo;வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி &nbsp;(எஸ்ஐஆர்) நடைபெற்று வரும் நிலை யில், ஆத்தூரில் பிஎல்ஓ-க்களிடம் அழுத்தம் கொடுத்து ஏராளமான வாக்காளர்களை &lsquo;இடமாறுதல்&rsquo; என செயலியில் பதிவு செய்ய வற்புறுத்தப் பட்டுள்ளதாக புகார்கள் உள்ளன. ஒட்டுப் பட்டி கிராமத்தில் மட்டும் 60 வாக்குகள் ஒரே தடவையில் நீக்கப்பட்டுள்ளன. அதே போல சின்னாளப்பட்டி பேரூ ராட்சியில் உள்ள 86 வாக்குச்சாவடி களில் மொத்தம் 25 ஆயிரம் வாக்கு களில், 7,227 வாக்குகள் ஒரே நேரத்தில் நீக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஆத்தூர் தொகுதியில் எங்கும் எஸ்ஐஆர் பணி நடைபெறாத தோடு, புதிய வாக்குச் சேர்க்கை &nbsp;படிவங்களும் எதுவும் பெறப்பட வில்லை. 2016-ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் 17 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருந்த நிலை யில், தற்போது 16,800 வாக்குகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட முறைகேட்டைக் காட்டு கிறது. பிஎல்ஓ-க்களிடம் கையெழுத்து பெற வற்புறுத்தி, தொகுதிவாரியாக 200, 250, 300 என வாக்குகளை நீக்கு வது தமிழ்நாட்டில் எங்கும் நடக்காத பெரிய அக்கிரமம். சின்னாளபட்டியில் பெரும்பாலான மக்கள் வெளியூர் தொழில்-வியாபாரத்துக்குச் செல்லும் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்கள் &lsquo;இடமாறுதல்&rsquo; என்று காட்டி நீக்கியுள்ள னர். இந்த பெரும் தவறில் தெளிவான சதி உள்ளது. தேர்தல் &nbsp;ஆணையம் உடனடியாக தலையிட்டு மறுஆய்வு நடத்த வேண்டும். நீக்கப்பட்ட 21,000 வாக்காளர்களையும் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்று அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.