அமைச்சர் கோவி. செழியன் வாக்குச் சேகரிப்பு
31 Mar 2026, 4:50 pm
<p><strong>அமைச்சர் கோவி. செழியன் வாக்குச் சேகரிப்பு</strong></p>
<p>கும்பகோணம், மார்ச் 31- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோவில், மாத்தூர், திருநறையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், செவ்வா ய்க்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன், மக்களை நேரில் சந்தித்து, அமைச்சர் கோவி. செழியன் வாக்கு சேகரித்தார். உயர்கல்வித் துறை அமைச்சராகவும், தமிழக அரசின் தலைமை கொறடா வாகவும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி, மூன்று முறை திருவிடைமருதூர் தொகுதியில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக தேர்தலில் கோவி. செழியன் போட்டியிடுகிறார். வாக்குச் சேகரிப்பின் போது திமுக உள்ளிட்ட சிபிஎம், சிபிஐ, விசிக கூட்டணி கட்சியினர் ஏராளமானார் கலந்து கொண்டனர்.</p>
