தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் மக்கள் நலத் திட்டப் பணிகள் அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்

15 Feb 2026, 3:03 pm
ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில்  மக்கள் நலத் திட்டப் பணிகள்  அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்
<p><strong>ராணிப்பேட்டை நகராட்சி பகுதியில் &nbsp;மக்கள் நலத் திட்டப் பணிகள் &nbsp;அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்</strong></p> <p>ராணிப்பேட்டை, பிப். 15- ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட 6 புதிய கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கடந்த வெள்ளிக்கிழமை (2026 பிப்ரவரி 13) &nbsp;பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை களை ஏற்று, மொத்தம் ரூ. 1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 4 புதிய நியாய &nbsp;விலைக் கடை கட்டிடங்கள், எல்.எஃப். சாலை மற்றும் ஹவுசிங் போர்டு அருகில் &nbsp;அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடம் ஆகியவை அடங்கும். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நவீன வசதிகளு டன் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிவறையை யும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழாக்களில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபாகரன், ராணிப்பேட்டை நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத் தலைவர் சீம. ரமேஷ் கர்ணா, நகராட்சி பொறியாளர் பரமுராசு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலு வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.