புதிய உயர்மட்ட பாலங்களை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
11 Feb 2026, 6:11 pm
<p><strong>புதிய உயர்மட்ட பாலங்களை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்</strong></p>
<p>திருவண்ணாமலை, பிப்.11- திருவண்ணாமலை மாவட்டம் கலச பாக்கம் சட்டமன்ற தொகுதி குருவிமலை- காலூர் மற்றும் பூண்டி - பழங்கோயில் இடையே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய உயர்மட்ட பாலத்தால் ஆணை வாடி, காலூர் அணியாலை, காம்பட்டு, அலங்காரமங்கலம், பாடகம், கோவூர், மன்சூராபாத் ஆகிய கிராம மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
