தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு நிதி உதவி, அரசு வேலைக்கு உறுதி

18 Nov 2025, 5:50 pm
பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு நிதி உதவி, அரசு வேலைக்கு உறுதி
<p><strong>பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு நிதி உதவி, அரசு வேலைக்கு உறுதி</strong></p> <p>கள்ளக்குறிச்சி,நவ. 18- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை மூப்பனார் கோவில் தெருவில் பெற்றோரை இழந்து தவித்த நான்கு குழந்தைகளை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர்களின் எதிர்காலத்தை அரசே பாதுகாக்கும் என்று உறுதி யளித்தார். சங்கராபுரம் பூட்டை மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்த கமலக்கண்ணன் - வசந்தி தம்பதிக்கு லாவண்யா, ரீனா, ரிஷிகா என்ற 3 மகள்க ளும், அபனேஷ் என்ற மகனும் உள்ளனர். தாய் வசந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தந்தை கமலக்கண்ணன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கால மானார். தந்தை உடலை அடக்கம் செய்யப் பணம் இல்லாமல் குழந்தைகள் தவித்த செய்தி ஊடகத்தில் வெளியானது. இந்தச் செய்தியை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியரைத் தொலை பேசியில் தொடர்புகொண்டு குழந்தைகளின் நிலை குறித்துக் கேட்டறிந்ததோடு, தானே தொலைபேசியில் குழந்தைகளிடம் பேசி ஆறுதல் கூறினார். மேலும், &ldquo;இந்த 4 குழந்தை களும் இனி நம் அரசின் குழந்தைகள், இவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்&rdquo; என்று சமூக வலைதளத்தில் பதி விட்டிருந்தார். இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலு திங்களன்று (நவ.17 இந்தக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். அப்போது, பெற்றோரை இழந்த மூத்த மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தொழிற்கல்வி படித்து இடைநின்ற இரண்டாம் மகளுக்குப் படிப்பைத் தொடர உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அக்குழந்தைகள் வைத்த னர். இந்தக் கோரிக்கை களை நிறைவேற்றிக் கொடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததுடன், அனைத்து உதவிகளையும் குழந்தைகளுக்குச் செய்யு மாறு அரசு அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாத், சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர் தா.உதய சூரியன், ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தே.மலை யரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.