தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜவ்வாது மலையில் ரூ.60 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்

23 Dec 2025, 4:05 pm
ஜவ்வாது மலையில் ரூ.60 கோடி மதிப்பில்  சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்
<p><strong>ஜவ்வாது மலையில் ரூ.60 கோடி மதிப்பில் &nbsp;சாலை மேம்பாட்டு பணிகள் அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பரமனந்தல் சாலையில் அத்திப்பட்டு ஒருவழிதடத்தை இடை வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு செவ்வாயன்று (டிச.23) துவக்கி வைத்தார். &nbsp;38.50 கி.மீ. &nbsp;மொத்த நீளம் கொண்ட இந்த சாலையானது மாவட்ட முக்கிய சாலை யான செங்கம் குப்பநத்தம் சாலையில் பிரிந்து, மாநில நெடுஞ்சாலையான போளூர்- ஜமூனாமரத்தூர்- ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் அத்திப்பட்டு பகுதியில் இணைகிறது. இந்தசாலை சுற்றுலா தளமான ஜவ்வாது மலைக்கு செல்லும் முக்கிய சாலை யாகும். மேலும் மாநகரங்கள், &nbsp;நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி களிலிருந்து சுற்றுலா தளமான ஜவ்வாது மலை செல்வதற்கும், அங்கு அமைந்துள்ள சிறப்புமிக்க இடங்களை பார்வையிடு வதற்கும் பயன்படுவதோடு, மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்க ளில் விளையும் பாரம்பரியமிக்க விவசாய விளை பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்ல, அங்கு வசிக்கும் மக்கள் பணி, வியாபாரம், மேற்படிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை பெறுவதற்காகவும் பிற நகரங்கள் செல்வ தற்கும் பயன்பாட்டில் உள்ள முக்கிய சாலையாகும். பராமனந்தல் பகுதியில் இருந்து மேல்பட்டு, பெருமட்டம், தென்மலை, புலியூர், மேல்சிலாம்பட்டி, மேல்விலாமூச்சி, கீழ்விலாமூச்சி, கல்யாணமந்தை, பலா மரத்துார், அத்திப்பட்டு ஆகிய பகுதியில் உள்ள கிராம மக்கள் சுமார் ஒரு லட்சம் பேர் இதனால் பயனடைய உள்ளனர். தற்போது இச்சாலை ஒரு வழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக &nbsp;மேம்பாடு செய்யப்பட்டு, 158 சிறுபாலங்கள், &nbsp;8 &nbsp;கொண்டை ஊசி வளைவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இச்சாலையில் 25000 மரக்கன்றுகள் இருபுறமும் நடுவ தற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணி 18 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி .என். அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலு வலர் ராம் பிரதீபன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.