முந்தய பக்கம்

முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு

18 Dec 2025, 5:31 pm
முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு
<p><strong>முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.18- தமிழக முதலமைச்சரின் திருவண்ணா மலை வருகையை முன்னிட்டு, திருக் கோவிலூர் சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே விழா நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ. கிரி (செங்கம்), பெ.சு.தி. சரவணன் (கலசபாக்கம்), ஒ. ஜோதி (செய்யாறு), எஸ். அம்பேத்குமார் (வந்தவாசி) ஆகி யோர் உடனிருந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் டாக்டர் ஆர். மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram