மேகதாது அணை விவகாரம் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>மேகதாது அணை விவகாரம் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்</strong></p>
<p>சென்னை, நவ. 13 - ‘’மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தக்கது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை’’ என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் அடிப்படையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை. தமிழக அரசு எடுத்த பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, மேகதாது அணை பற்றிய கருத்துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளக் குழுமத்திற்கு 9-2-2024 அன்று திருப்பியனுப்பியது. இது தமிழக அரசின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். எனவே, காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் தமிழக அரசு விட்டுக் கொடுக்காது என்றும் விளக்க அளித்துள்ளார்.</p>
