வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்டஉதவி..
8 Feb 2026, 3:55 pm
<p><strong>வேலூரில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்டஉதவி..</strong></p>
<p>வேலூர், பிப். 8- வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மாதாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 169 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரத்து 590 மதிப்பில் வீட்டுமனைப்பட்டா மற்றும் முதி யோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வழங்கினார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா.சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன். ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலை வாணி பாபு. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செ.ரவி, ஆனந்தி சதாசிவம், மாதாண்ட குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ரா.வெங்க டேசன், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ் வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
